தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
மின் விளக்கு சீரமைக்கப்பட்டது
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இளவணிகர் தெரு, உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மின் விளக்கு பழுதடைந்து கடந்த சில நாட்களாக எரியாமல் இருந்தது. இதுகுறித்து, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சீரமைத்தனர். அதைத்தொடர்ந்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சுகாதார சீர்கேடு
குலசேகரபுரம் பஞ்சாயத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் அபாயமும் இருக்கிறது. எனவே அதை தடுக்க கழிவுநீர் ஓடையில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தை காக்க வேண்டும்.
-எஸ்.அய்யப்பன், குலசேகரபுரம்.
குளத்தை தூர்வார வேண்டும்
கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட செம்பருத்திவிளை குருவிகாடு பகுதியில் ஆலங்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் குளத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதுடன், பாசியும் படர்ந்து உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-வினிஸ், வழிக்கலாம்பாடு.
கழிவு நீர் ஓடையை சீரமைக்க வேண்டும்
பூதப்பாண்டி பா.ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி முன்பு செடி, குப்பைகள் நிறைந்து உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் ஓடை உடைந்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு குப்பையை அகற்றி, கழிவுநீர் ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜலெட்சுமி சிவக்குமார், பூதப்பாண்டி.
Related Tags :
Next Story