கடல்போல் காட்சி அளிக்கும் பெரியகுளம் கண்மாய்
கடல்போல் பெரியகுளம் கண்மாய் காட்சி அளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு,
கடல்போல் பெரியகுளம் கண்மாய் காட்சி அளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இந்த கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை, மா, கொய்யா, வாழை, பலா உள்ளிட்டவற்றிற்கு அடுத்த படியாக நெல் இங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பிரதான நீர் நிலையாக அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணை.
தொடர்மழை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது.
வத்திராயிருப்பு அருகே உள்ள பெரியகுளம் கண்மாயை நம்பி 900-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளார். .தற்போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முதல் போக நெல் அறுவடையை முடித்து விட்டு கோடை கால நெல் நடவிற்கு தயாராகி வருகின்றனர். வத்திராயிருப்பு பகுதியில் நடவு செய்வதற்காக விவசாயிகள் தங்களது வயல்களை உழவு தொழில் பணியினையும், நெல் நாற்று நடவு பணி நீக்கம் செய்து வருகின்றனர். பெரியகுளம் கண்மாய் முழு கொள்ளளவு இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பணியினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story