அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தங்கை சாவு
அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தங்கை சாவு
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரதேசி (வயது90). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 தங்கைகள் இருந்தனர். இளைய தங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூத்த தங்கை மீனாட்சி (85) ஆரல்வாய்மொழி காந்திநகரில் மகளுடன் வசித்து வந்தார். அண்ணணும், தங்கையும் ஒருவருக்கொருவர் அதிகம் பாசமாக இருந்தனர்.
இந்தநிலையில் பரதேசி கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதை கேள்விப்பட்ட தங்கை மீனாட்சி அங்கு சென்று அண்ணனின் உடல் மீது விழுந்து புரண்டு அழுதார். பின்னர் சரிவர சாப்பிடாமல் அண்ணனின் நினைவாகவே இருந்துள்ளார். அண்ணன் பரதேசியின் நினைவு சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில் மீனாட்சி உடல்நிலை திடீரென்று மோசமாகி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்து ஒரு வாரத்திற்குள் தங்கையும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story