மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி சாவு
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆத்திராஜன் (வயது 54). திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் வலை வியாபாரம் செய்து வந்தார் நேற்று முன்தினம் இவரும், இவரது மனைவி தமிழ்வாணியும் (50) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
ஆயன்குளம் அருகே சென்றபோது எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் கணவன், மனைவி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆத்திராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார். ஆத்திராஜன் மீது மோதியவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தமிழ்வாணி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story