சென்னிமலை அருகே 110 வயது முதியவர் மரணம்
சென்னிமலை அருகே 110 வயது முதியவர் மரணம் மரணம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சில்லாங்காட்டுவலசு பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர். விவசாயி. இவர் கடந்த 6-ந் தேதி தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். கருப்பண கவுண்டருக்கு தற்போது வயது 110 ஆகும்.
இவர் காலை உணவாக ராகி கூழ் மட்டும் குடிப்பார். மற்ற இரு வேளைகளுக்கு மட்டும் உணவு சாப்பிடுவார். அவர் இறக்கும் வரை அவருக்கு எந்த நோய்களும் இல்லை. கண் பார்வையும், கேட்கும் திறனும் நன்றாக இருந்தது. சமீபத்தில் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்ட அவர் தனது 110-வது வயதில் இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
110-வது வயதில் இறந்த கருப்பண கவுண்டரின் மனைவி கடந்த 1987-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு சுப்பிரமணி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இதில் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் மகள் கண்ணம்மாள் வீட்டில் கருப்பண கவுண்டர் வசித்து வந்தார். கருப்பணகவுண்டருக்கு 2 பேரன்களும், 2 பேத்தியும் உள்ளனர்.
Related Tags :
Next Story