400 பாத்திரங்கள் பறிமுதல்
அருப்புக்கோட்டையில் 400 பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே பூபால் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புதிய பாத்திரங்கள் ( ‘நான்ஸ்டிக்’) வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருப்பதி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்றனர். அங்கு 14 பெட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே தீபாவளி சீட்டு போட்டவர்களுக்கு வழங்குவதாக வைக்கப்பட்டிருந்த பொருட்களை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியிடமும், நகராட்சி ஆணையாளரிடமும் ஆவணங்களை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்திய பின்னர் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரன் கூறினார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story