ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்துக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி மனு


ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்துக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி மனு
x
தினத்தந்தி 10 Feb 2022 1:42 AM IST (Updated: 10 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்துக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது

தாமரைக்குளம்
அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், அந்த பதவி காலியாக உள்ளது. ஆகவே, தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலோடு ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என அக்கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை, கொரோனா காலமாக இருப்பதால் கூட்டமாக செல்லாமல் 5 பேர் மட்டும் சென்று மனு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில், முக்கியஸ்தர்கள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக உள்ளதால் வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பதாவும் ஆகவே, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலோடு ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்துக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story