காங்கிரஸ் பிரமுகர் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில், மிளகாய் பொடியை கண்ணில் தூவி காங்கிரஸ் பிரமுகர் மனைவியிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில், மிளகாய் பொடியை கண்ணில் தூவி காங்கிரஸ் பிரமுகர் மனைவியிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காங்.பிரமுகர் மனைவி
ஈரோடு வைராபாளையம் நாட்ராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈ.பி.ரவி (வயது 52). இவர் காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய மனைவி புனிதா (47).
இவர், ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள டெய்லர் கடைக்கு நேற்று சென்றார். பின்னர் அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருநகர் காலனி ஆறுமுக வீதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே மதியம் சென்ற போது திடீரென ஸ்கூட்டர் பழுதாகி நின்றது.
6 பவுன் நகை பறிப்பு
இதைத்தொடர்ந்து அவர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய முயன்றார். ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை புனிதா கண்ணில் தூவினர்.
இதனால் அவர் கண் எரிச்சல் தாங்காமல் “அய்ே்யா, அம்மா” என அலறி துடித்தார். இதை மர்ம நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரது கைகளில் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையல்களை பறித்தனர். பின்னர் அவருடைய கழுத்தில் கிடந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது புனிதா “திருடன், திருடன்” என கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க வளையல்களை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story