தஞ்சை- விக்கிரவாண்டி நான்கு வழி சாலை டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்


தஞ்சை- விக்கிரவாண்டி நான்கு வழி சாலை டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:06 AM IST (Updated: 10 Feb 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர் கூறினார்.

தஞ்சாவூர்;
தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர் கூறினார்.
நான்கு வழிச்சாலை
விக்கிரவாண்டி -கும்பகோணம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையினை மேம்படுத்தி நான்கு வழிச்சாலை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலைப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது
இச்சாலைப்பணியினை விரைந்து முடித்திடும் நோக்கத்தில் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மொத்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு முழுமையான புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மேம்பாலங்கள்
மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை உள்ள சாலையில் உள்ள பாபநாசம் சாலை மிகவும் குறுகலானதாகவும் இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தில் தஞ்சை கும்பகோணம் இடையேயான தொலைவு 50 கிலோ மீட்டர் ஆகும் இந்த தொலைவை பஸ் கடந்து செல்வதற்கு 1.30 மணி நேரம் பயண நேரம் ஆகிறது. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 2 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் தாராசுரத்தில் ரெயில்வே மேம்பாலம் வளையபேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்த நல்லூர், சூலமங்கலம், பொரக்குடி வடக்குமாங்குடி, அருண்மொழிபேட்டை, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலை அமைக்கும் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரனிடப்பட்டுள்ளது மேற்கண்ட பணிகள் அனைத்தும் வருகிற  டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story