விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை


விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Feb 2022 2:08 AM IST (Updated: 10 Feb 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே உள்ள பெருமாள் பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45. இவருடைய மனைவி ஜெயமணி. இவர்களது மகள் சுகந்தி (18). இவர் சாத்தூர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் ஜெயமணி வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு சுகந்தியிடம் கூறிய போது அவர் வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுகந்தி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனையடுத்து அவரை உடனடியாக சிகிச்சைக்காக உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story