நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:12 AM IST (Updated: 10 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.

கும்பகோணம்;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறினார். 
தேர்தல் பணிக்குழு கூட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் கா.அறிவழகன், என்.ஆர்.வி.எஸ்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். 
அவர் பேசியதாவது
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்காக பணிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்களின் ஆலோசனைகளை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முத்துக்கிருஷ்ணன் முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், முன்னாள் நகர செயலாளர் பி.எஸ்.சேகர் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிரந்தர பிரிவு கிடையாது
கூட்டத்திற்கு பின்னர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது. எனவே தற்போது நடைபெறுகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா வெளியேறி இருப்பது நிரந்தரமான பிரிவு கிடையாது. 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக அ.தி.மு.க. கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததாக பேசி வருகிறார்.
7.5 சதவீத இடஒதுக்கீடு
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது அ.தி.மு.க. ஆட்சி. இந்த அரசாணை மூலம் அரசு பள்ளியில் படித்த 435 மாணவ-மாணவிகளின் கல்வி கட்டணம், விடுதி கட்டணங்களை அரசே ஏற்று அவர்கள் மருத்துவ படிப்பை பயின்று வருகின்றனர். 
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 11 மருத்துவக்கல்லூரிகள் அமைந்துள்ளது. மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்க பல திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இதேபோல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியது
அ.தி.மு.க. ஆட்சி 
அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும்
பொதுமக்கள் பயனடையும் வகையிலும், மாணவ- மாணவிகளின் நலனுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. அ.தி.மு.க. சார்பில் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அனைத்து இடங்களையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story