கோவில் உண்டியலை உடைக்க முயன்ற வாலிபர் கைது


கோவில் உண்டியலை உடைக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2022 2:13 AM IST (Updated: 10 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கொளத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அருகில் உள்ளவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, கோவிலின் நுழைவுவாயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் ஒருவர் உண்டியலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள் கீழப்பழுவூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், தஞ்சை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மகன் ராமன் (வயது 24) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story