கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து ெகாண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் சந்தானலட்சுமி (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் இவர் வீட்டில் செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது தந்தை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் பொன்னாங்கண்ணி கண்மாய்அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சந்தானலட்சுமியின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story