வைணவ கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றம்


வைணவ கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:19 AM IST (Updated: 10 Feb 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் உள்ள 3 வைணவ கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கும்பகோணம்;
கும்பகோணத்தில் உள்ள 3 வைணவ கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மாசி மக கொடியேற்றம்
கும்பகோணம் நகரில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த 5 வைணவ கோவில்கள் உள்ளன. இந்த வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்கும் சக்கரபாணி கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி நேற்று காலை கொடிமரம் அருகே சக்கரபாணி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கருடன் உருவத்துடன் கூடிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 18-ந்தேதி வரை விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் வீதிஉலா நடக்கிறது. 
தீர்த்தவாரி
வருகிற 17-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாசிமகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சக்கரபாணி தேரில் எழுந்தருள ளி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை காவிரி சக்கரபடித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
ராஜகோபாலசாமி கோவில்
கும்பகோணம் ராஜகோபாலசாமி கோவிலில் ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபாலசாமி கொடிமரத்தின் அருகே எழுந்தருள நேற்று காலை மாசிமக விழா கொடியேற்றம் நடந்தது. 
ஆதிவராக பெருமாள் கோவில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளினார். தொடர்ந்து காலை கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Next Story