பாரம் தாங்காமல் உடைந்த பாலத்தில் சிக்கிய லாரி
பாரம் தாங்காமல் உடைந்த பாலத்தில் சிக்கிய லாரி
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தூம்பக்குளம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் பழமையான பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1970-ல் கட்டப்பட்டது. கிருஷ்ணாபுரம்- தூம்பக்குளம் ஆகிய கிராமங்களைச் சுற்றி குவாரிகள் உள்ளன. இதன் வழியாக செல்லும் கனரக லாரிகள் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு பாலத்தின் மீது லாரிகள் செல்லக்கூடாது என ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பாலத்தின் மீது சென்றது. அப்போது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் லாரியும் சிக்கி கொண்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக டிப்பர் லாரி டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
Related Tags :
Next Story