சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்-வாழப்பாடியில் இன்று தொடங்குகிறார்
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாழப்பாடியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாழப்பாடியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்கிறார்.
ஏற்காடு சட்டசபை தொகுதியில் பேளூர், வாழப்பாடி பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து காலை 9.30 மணிக்கு வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் வாக்குகள் சேகரிக்கிறார்.
கெங்கவல்லி தொகுதி தம்மம்பட்டி, கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தம்மம்பட்டியில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு வாக்குகள் சேகரிக்கிறார்.
கெங்கவல்லி
கெங்கவல்லி, வீரகனூர் பேரூராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கெங்கவல்லி ராமலிங்கம் திருமண மண்டபத்தில் 11.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குகள் சேகரிக்கிறார். ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆத்தூர் கோட்டை எல்.ஆர்.சி. திருமண மண்டபத்தில் மதியம் 2 மணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து வைத்தியகவுண்டன்புதூர் ஐஸ்வர்யம் திருமண மண்டபத்தில் மதியம் 3.30 மணி அளவில் வாக்கு சேகரிக்கிறார். அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேளூர் மெயின் ரோட்டில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு வாக்குகள் சேகரிக்கிறார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டல பகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
12-ந் தேதி
12-ந் தேதி காலை 8.30 மணிக்கு பனமரத்துப்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, 9.30 மணிக்கு ஆட்டையாம்பட்டி, மல்லூரிலும், 10.30 மணிக்கு இளம்பிள்ளை, 11.30 மணிக்கு இடங்கணசாலை, 12.30 மணிக்கு சங்ககிரி, 3 மணிக்கு தேவூர், அரசிராமணி, மாலை 4 மணிக்கு பூலாம்பட்டி, 4.30 மணிக்கு எடப்பாடி, 6 மணிக்கு கொங்கணாபுரம், 6.30 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மண்டல பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
13-ந் தேதி
13-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூரில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து 9.30 மணிக்கு மேச்சேரி, 10.30 மணிக்கு மேட்டூர், கொளத்தூர், 11.30 மணிக்கு இடங்கணசாலை, 12.30 மணிக்கு சங்ககிரி, மதியம் 2 மணிக்கு நங்கவள்ளி, வனவாசி, 3 மணிக்கு பி.என்.பட்டி, வீரக்கல்புதூர், 3.30 மணிக்கு ஜலகண்டாபுரம், 4.30 மணிக்கு தாரமங்கலம், 5.30 மணிக்கு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
Related Tags :
Next Story