எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு
x
தினத்தந்தி 10 Feb 2022 3:30 AM IST (Updated: 10 Feb 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நேற்று நடைபெற்றது.

சேலம்:
சேலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நேற்று நடைபெற்றது.
திருப்புதல் தேர்வு
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக சரியான முறையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டன. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு பள்ளிகளில் நேரடியாக நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் ஒரே மாதியான கேள்வித்தாள்கள் தயார் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
அதன்படி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் 246 உயர்நிலைப்பள்ளிகள், 364 மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு போன்று கட்டுப்பாடுகளுடன் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
வேறு பள்ளி ஆசிரியர்கள்
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் நேற்று தமிழ் தேர்வு நடைபெற்றது. திருப்புதல் தேர்தல் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்புக்கு வருகிற 15-ந்தேதியும், பிளஸ்-2 மாணவர்களுக்கு 16-ந்தேதியும் தேர்வு முடிவடையும். விடைத்தாள்கள் வேறு பள்ளி ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படும். உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நாளை (இன்று) நடக்கிறது. இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் நாளை (இன்று) நடக்க இருந்த ஆங்கிலத்தேர்வு வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story