கெங்கவல்லி அருகே சிறுமியிடம் சில்மிஷம்: தூய்மை பணியாளருக்கு 5 ஆண்டு ஜெயில்-சேலம் கோர்ட்டில் தீர்ப்பு
கெங்கவல்லி அருகே சிறுமியை சில்மிஷம் செய்த வழக்கில் தூய்மை பணியாளருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்:
கெங்கவல்லி அருகே சிறுமியை சில்மிஷம் செய்த வழக்கில் தூய்மை பணியாளருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிறுமியிடம் சில்மிஷம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 40). இவர் கொண்டையம்பள்ளி பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி கல்யாணசுந்தரம் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுறித்து அந்த சிறுமியின் தாய் ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியிடம் சில்மிஷம் செய்த கல்யாணசுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டு ஜெயில்
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக கல்யாணசுந்தரத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story