சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணி முதல் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில்
அவினாசி ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும் பொருட்டு கடந்த ஜனவரி மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது குடும்ப உறுப்பினர் அடங்கிய புகைப்படம் ஒட்டிய படிவத்தை ஆணையாளரிடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்துணவு பெண் அமைப்பாளர் தனது கணவர், மகள் ஆகியோர் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார். அவரது படிவத்தில் அலுவலகம் முத்திரையும் ஆணையாளரின் கையப்பம் பெறப்பட்டுள்ளது. படிவம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் புகைப்படத்துடன் அலுவலக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.இதுபற்றி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story