குவிந்து கிடக்கும் குப்பை
குவிந்து கிடக்கும் குப்பை
ஆபத்தான மின் கம்பம்
திருப்பூர் மாநகராட்சியை அடுத்த 1வது மண்டலம் முன்பு காமராஜர் உருவச் சிலை அருகில் இரும்பு மின் கம்பம் நடப்பட்டு உள்ளது. அதில் ஏராலமான மின் இணைப்பு வயர்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கம்பமானது தரைத்தளத்தில் நடப்பட்ட பகுதியில் துருப்பிடித்து முற்றிலும் சேதமடைந்து சிறு துரும்பளவில் மட்டுமே நிற்கின்றது. இந்த கம்பத்தின் இழுப்புக் கம்பியும் கட்டப்பட்டு பின் அதுவும் பிடிமானமில்லாமல் மின் கம்பத்தைச் சுற்றி கீழே பயனற்று கிடக்கின்றது. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மின் கம்பம் விழுந்து விடும் நிலையில் விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பெரும் விபத்தினை தடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
பல்லடம் நகரம் ப.வடுகபளையித்தில் காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை உடுமலை பஸ் வருவது இல்லை. இதனால் ஏராளமான பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே வழக்கமாக இயங்கக்கூடிய பஸ்களை வருவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிந்து கிடக்கும் குப்பை லிருந்து மீனாம்பாறை செல்லும் வழியில் பல நாட்களாக குப்பை அகற்ற படாமல் உள்ளது. இந்த குப்பையில் தீ வைப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் பாதிக்கப்டுகிறார்கள். அது மட்டுமல்ல அந்த பகுதி வழியாக இருசக்கர வ ாகனத்தில் செல்வோருக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story