மகசூல் பாதித்த விளைநிலத்தில் அதிகாரி ஆய்வு


மகசூல் பாதித்த விளைநிலத்தில்  அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 10 Feb 2022 5:03 PM IST (Updated: 10 Feb 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

மகசூல் பாதித்த விளைநிலத்தில் அதிகாரி ஆய்வு

மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதி கடந்த சம்பா பருவத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பல இடங்களில் அறுவடை நடக்கிறது. வேடபட்டி விளைநிலத்தில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு  தரமற்ற நெல் விதைகள் தான் காரணம் எனவும், இதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக் கை தேவை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து கடந்த 8ந் தேதிதினத்தந்தி நாளிதழில் பட த்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  கோவை விதை ஆய்வு துறை துணை இயக்குனர் வெங்கடாச்சலம் மற்றும் அலுவலர் கள் மடத்துக்குளம் பகுதிக்கு வந்து சம்பந்தப்பட்ட விளைநிலத்தில் விளைந்திருந்த நெல்லை ஆய்வு செய்தனர். 
விதை காரணம் அல்ல
 இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது
வேடபட்டியில் உள்ள விளைநிலத்தில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டதற்கு விதை காரணம் அல்ல விதை தவிர இதர பல காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனி சாகுபடி செய்யும்போது வேளா ண்மைதுறையினரை, விவசாயிகள் தொடர்பு கொண்டு பருவத்திற்கு த குந்த விதைகளை கேட்டறிந்து, அவர்கள் பரிந்துரையின்படி வாங்க வே ண்டும். 
அந்த விதைகள் வளர்ந்து வரும்போது அதற்கு தகுந்த உரங்கள், மருந்துகளை வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுதலின்படி பயன்படுத்த வேண்டும். இடைத்தரகர்களிடம் விதைகள் வாங்ககூடாது. உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்களுடன் வாங்க வேண்டும். அந்த ஆவணங்களை அறுவடைமுடியும் வரை விவசாயிகள் வைத்திருக்க வேண்டும்.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story