63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா


63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 10 Feb 2022 6:01 PM IST (Updated: 10 Feb 2022 6:01 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா நடந்தது

கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவிலில் திருமுறை மன்றம் சார்பில் 63 நாயன்மார்கள், தொகையடியார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமி உற்சவ மூர்த்திகளின் எட்டாவது ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை சங்கல்பம் கும்பகோணம் காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கைலாயபுரம் செங்கோல் ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், தென்மண்டல கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள், திருமுறை மன்ற தலைவர் கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, செயலாளர் நெல்லையப்பன், பொருளாளர் சிவானந்தம், கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் மற்றும் மன்ற நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை யொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சங்கரன் ஓதுவார் திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது.

Next Story