சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களிடம் ரூ.67 ஆயிரம் பறிமுதல்
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களிடம் ரூ.67 ஆயிரம் பறிமுதல்
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கூடலூரில் இருந்து லாரியில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு நெலாக்கோட்டை பகுதியில் வினியோகம் செய்ய ஊழியர்கள் சென்றனர். பின்னர் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்துடன் தேவர்சோலை 8-ம் மைல் பகுதியில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அந்த லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஊழியர்களிடம் இருந்த ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த தொகை தேவர்சோலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து ரசீது பெற்றனர். கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து, பொதுமக்களிடம் பணம் பெற்றதற்கான உரிய சான்றுகளை காண்பித்தும் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story