காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு
காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு
திருப்பூரில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்தனர்.
கடைக்காரர்களுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுறுத்தலின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் திருப்பூர் மாநகர பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள் என 43 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் விற்பனை குறித்தும் ஆய்வு நடந்தது. இதில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து 3 கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 3 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குளிர்பானங்கள் பறிமுதல்
மளிகை கடைகளில் கலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 110 லிட்டர் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. உணவு பொட்டலங்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தவற்றை பறிமுதல் செய்தனர். 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. உணவுப்பொருட்கள், காய்கறிகள், இறைச்சிகளை சுத்தமாக, தரமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இறைச்சி, மீன்களில் செயற்கை நிறமிகளை சேர்த்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
உணவு தரம் மற்றும் கலப்படம் புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story