1 லட்சம் ஆமை முட்டைகளை சேகரித்த பணியாளர்


1 லட்சம் ஆமை முட்டைகளை சேகரித்த பணியாளர்
x
தினத்தந்தி 10 Feb 2022 10:17 PM IST (Updated: 10 Feb 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 1 லட்சம் ஆமை முட்டைகளை சேகரித்த பணியாளருக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு தெரிவித்தார்.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 1 லட்சம் ஆமை முட்டைகளை சேகரித்த பணியாளருக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு தெரிவித்தார். 

ஆமை முட்டை பொரிப்பகம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனத்துறை அலுவலகத்தில் கடல் ஆமை முட்டை பொரிப்பகம் உள்ளது. இங்கு அழிந்துவரும் இனமான அலிவர் ரெட்லி ஆமைகள் கடலோரத்தில் இடும் முட்டைகளை சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். இங்கு பாதுகாக்கப்படும் முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன. இந்த பணி 1982-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 
கடலோரத்தில் கடல் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரிக்க வனத்துறை பணியாளர்களைத்தவிர தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடேசன் (வயது70), ஆமை முட்டைகளை சேகரித்து வருகிறார். இவர் இதுவரை 1 லட்சம் ஆமை முட்டைகளை சேகரித்து உள்ளார்.  

கலெக்டர் பாராட்டு

இந்த நிலையில் கோடியக்கரை கடல் ஆமை முட்டை பொரிப்பகத்தில் ஆய்வுசெய்த நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், 1 லட்சம் முட்டைகளை சேகரித்த நடேசனை பாராட்டினார். அப்போது ஆமை முட்டை பொரிப்பகத்தில் சேகரிக்கப்படும் முட்டைகள் குறித்தும், அதில் இருந்து முட்டைகள் வெளிவருவது குறித்தும் நடேசன், கலெக்டருக்கு விளக்கினார். 
இதையடுத்து நாகை மாவட்ட கலெக்டர் அவவலகத்துக்கு நடேசனை வரவழைத்த கலெக்டர், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், வனவர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story