நெல் கொள்முதல் பணிகள் தீவிரம்
திருக்கடையூர் பகுதியில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கடையூர்:-
திருக்கடையூர் பகுதியில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல் சாகுபடி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு இறுதியில் வெளுத்து வாங்கியது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனிடையே விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், டி.மணல்மேடு, வளையல்சோழகன், நட்சத்திரமாலை, கண்ணங்குடி, கில்லியூர், கிடங்கல், மாமாகுடி, மருதம்பள்ளம், காலமநல்லூர், ஆக்கூர், மடப்புரம், அப்புராசபுரம்புத்தூர், கருவேலி, அன்னப்பன்பேட்டை மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நாற்றங்கால் அமைத்தும், நேரடி நெல்விதைப்பின் மூலமும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து இருந்தனர்.
அறுவடை
இந்த பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சம்பா சாகுபடியில் ஏ.டி.டி. 38 போன்ற சன்னரக நெல் குவிண்டால் ரூ.2,060-க்கும், மோட்டா ரகம் குவிண்டால் ரூ.2,015-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story