வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Feb 2022 11:29 PM IST (Updated: 10 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

கரூர்
கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பட்டுவளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி, புகலூர் நகராட்சி தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் பட்டுவளர்ச்சித்துறை இயக்குனர் சாந்தி, புகலூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள காந்தியார் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மின்சாரம், குடிநீர், சாய்தளம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து புகலூர் நகராட்சி மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக வேலாயுதம் பாளையம் காந்தியார் திருமண மண்டபத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்ற போது பார்வையிட்டு வாக்குப்பதிவு நாளான்று சிறப்பாக பணிகளை மேற்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Next Story