உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3¼ லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2022 11:49 PM IST (Updated: 10 Feb 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டை மற்றும் சங்கராபுரத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலூர்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் ரிஷிவந்தியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு தலைமையில் போலீஸ்காரர் செந்தில்குமார் மற்றும் சுகுமார், சுதாகர் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த  திருவண்ணாமலை இனாம்காரியந்தல் பகுதியை சேர்ந்த அருள் (வயது 34) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 63 ஆயிரத்து 200 கொண்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மணலூர்பேட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

சங்கராபுரம்

இதேபோல் சங்கராபுரம் பேரூராட்சி தேர்தல் பறக்கும்படை அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமானஅய்யப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸ் ஏட்டுகள் சரவணன், ஐசக்ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சங்கரா     புரம் -திருக்கோவிலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 650 எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் உதவியாளர் புவனேஸ்வரியிடம்  பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Next Story