நாமக்கல் மாவட்டத்தில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு-98 பேருக்கு தொற்று உறுதி


நாமக்கல் மாவட்டத்தில் 100-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு-98 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Feb 2022 11:51 PM IST (Updated: 10 Feb 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது.

நாமக்கல்:
98 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 296 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 394 ஆக அதிகரித்தது.
100-க்கு கீழ் குறைந்தது
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 3-வது அலை கடந்த மாதம் வேகமாக பரவியது. இதனால் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. 
அதன்படி இந்த மாதத்தில் நேற்று கொரோனாவால் 100-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டனர். இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனிடையே மாவட்டத்தில் நேற்று 532 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 65 ஆயிரத்து 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 532 பேர் உயிரிழந்த நிலையில், 1,816 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story