குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
பரமக்குடி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட உலகநாதபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு குடிநீர் இணைப்பு கேட்டு பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தள்ளு வண்டிகள் மூலம் அங்கே சென்று குடிநீரை எடுத்து வருகின்றனர். நேற்று காலை அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர் வராததை கண்டித்து மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story