ஆற்காடு அருகே ஆம்புலன்சில் குவா குவா


ஆற்காடு அருகே ஆம்புலன்சில் குவா குவா
x
தினத்தந்தி 11 Feb 2022 12:08 AM IST (Updated: 11 Feb 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா (வயது 31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிசாவுக்கு நேற்று பிரசவ வலி  ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உதவியாளர் கோகுல கண்ணன், டிரைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் அழைத்து சென்றனர்.

நாராயணபுரம் என்ற இடத்தில் சென்றபோது வனிதாவிற்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் கோகுலக்கண்ணன் பிரசவம் பார்த்தார். அப்போது வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்   அனுமதிக்கப்பட்டனர்.

Next Story