அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய போலீஸ் சூப்பிரண்டு
சங்கராபுரம் அரசு பள்ளியில் மாணவா்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் பாடம் நடத்தினாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சிக்கான தேர்தல் 15 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதில் சங்கராபுரம் அரசு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6,7 மற்றும் ஆண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 8,9 ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தேர்லையொட்டி அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கிருந்த போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.
கலந்துரையாடல்
பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து 7-ம் வகுப்பு மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சிறிது நேரம் பாடம் நடத்தி கேள்விகளை கேட்டார். அதற்கு மாணவ-மாணவிகள் உரிய பதில் அளித்தனர். பி்ன்னர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story