போலீசார் கொடி அணிவகுப்பு
பரமக்குடி, முதுகுளத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடி, முதுகுளத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலமானது பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் இருந்து தொடங்கி ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம் வழியாக எமனேசுவரம், வைகை நகர் பகுதியில் நிறைவடைந்தது. துணை சூப்பிரண்டு திருமலை தலைமையில் ஆயுதப்படை துணை சூப்பிரண்டு ராஜ்மோகன், பரமக்குடி இன்ஸ்பெக்டர்கள் முகம்மது, தமிழ் செல்வி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் மொத்தம் 73 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று போலீசார் சார்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு முதுகுளத்தூர் துணை சூப்பிரண்டு சின்ன கண்ணு, ஆயுதப்படை துணை சூப்பிரண்டு ராஜ் மோகன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். ஊர்வலம் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் தொடங்கி பஸ் நிலையம் வழியாக காந்தி சிலையில் நிறைவு பெற்றது. இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story