தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்


தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2022 12:38 AM IST (Updated: 11 Feb 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகரசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

திருவாரூர்:
திருவாரூர் நகரசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
திருவாரூர் நகரசபை உள்ளாட்சி தேர்தலில் 30 வார்டு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தி.மு.க. 29 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன. இந்தநிலையில் திருவாரூர் நகராட்சி 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தலைமை தாங்கினார். அமைச்சர் சக்கரபாணி தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து கட்சி துண்டினை போர்த்தி கவுரவித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்து வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்க வேண்டும். திருவாரூர் நகரசபை தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம், பாலு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளருமான கலியபெருமாள், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
இதேபோல் திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கி, தி.மு.க. உள்பட 23 வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கே.மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, உலகநாதன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story