4 பேர் கைது
திருப்பாச்சேத்தி பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி பகுதியில் குற்ற வழக்கில் ஈடுபடுபவர்களை பிடிக்க மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பக்ருதீன், தலைமை ஏட்டு வேல்முருகன், ராஜா ஆகியோர் உள்ளனர். இந்த தனிப்படையினருக்கு மாரநாடு ஆர்ச் அருகில் உள்ள கருவேலமரம் பக்கத்தில் 5 பேர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற தனிப்படையினர் 4 பேரை பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த விசாரணையில் பிடிபட்டவர்கள் ராம்குமார் (வயது 21), முத்துராஜா (25), குருமதீஷ் (20), சஞ்சய் என்ற மருது (19) என்றும் இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சதித்திட்டம் தீட்டியதும் தெரியவருகிறது. பிடிபட்ட 4 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குபதிவு செய்து கைது செய்தார். தப்பியோடிய நபரையும் தேடி வருகிறார்.
Related Tags :
Next Story