காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு
காரைக்குடியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி,
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும், பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் காரைக்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார். காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி முன்னிலை வகித்தார். முன்னதாக போலீஸ் பேண்ட் வாத்திய குழுவினர் இசைத்தபடி முன்பு செல்ல அதன் பின்னர் பாதுகாப்பு படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பாக சென்றனர். ஊர்வலம் காரைக்குடி முதல் மற்றும் 2-வது பீட், செக்காலை ரோடு, பெரியார் சிலை, 100 அடி சாலை வழியாக புதுபஸ் நிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story