தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Feb 2022 1:13 AM IST (Updated: 11 Feb 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பள்ளம் மூடப்பட்டது
சாமியார்மடத்தில் இருந்து வேர்கிளம்பி செல்லும் சாலையில் பருத்தி வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே சாலையின் பக்க வாட்டில் பள்ளம் ஏற்பட்டு காணப்பட்டது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்து மூடினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
சுசீந்தரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரையான்குழி பகுதியில் இருந்து சகாயபுரம் கிறிஸ்தவ ஆலயம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே கழிவுநீர் செல்வதற்று சிறிய ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடை சேதமடைந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                  -பிரவின், கரையான்குழி.
சேதமடைந்த மின்விளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடம் பகுதியில் சாலையோரம் அமைக்கபட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் சேதமடைந்து எரியாமல் பொருத்திய நிலையில் இருந்து கீழே தொங்கியபடி காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த விளக்கை சீரமைத்து எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                             -கரிகாலன், ஊட்டுவாழ்மடம்.
காத்திருக்கும் ஆபத்து
நாகர்கோவில், அவ்வை சண்முகம் சாலை ஒழுகினசேரி சந்திப்பில்  பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேல்தளம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.                                                  -புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
சேதமடைந்த மின்கம்பம்
தென்தாமரைகுளத்தில் இருந்து கோட்டையடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                  -செல்வகுமார், தென்தாமரைகுளம்.
சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கோதையாறு வடிநில கோட்ட அலுவலக  வளாகத்தில் உள்ள கழிவறை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
                       -கோ.வெற்றி வேந்தன், வெள்ளமடம்.


Next Story