தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Feb 2022 1:20 AM IST (Updated: 11 Feb 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், பவுண்டரீகபுரம், புத்தகரம் ஆகிய ஊராட்சி எல்லைகளின் சாலை அருகே ஒரு வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்காலிலிருந்து வரும் தண்ணீர் புத்தகரம் கிராம விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு பயன்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடைக்காரர்கள் வாய்க்கால் அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அருகில் மருந்துக்கடைகள் உள்ளதால் மருத்துவ கழிவு பொருட்களையும் கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பவுண்டரீகபுரம்.
மின் விளக்கு எரியுமா?
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே இரு வழிச்சாலையின் சந்திப்பில் அமைந்துள்ள மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அப்பகுதியில் செல்ல சிரமப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி அடிக்கடி வழிப்பறி சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாமல் உள்ள மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.

Next Story