சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஹோமம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஹோமம் நடைபெற்றது
சமயபுரம்
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 5 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை விக்னேஸ்வர பூஜை, தேவி ஆவாஹனம், சப்தசதி, பாராயணம், யோகினி, பைரவர்பலி ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல்மதியம் 1 மணி வரை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவிஆவாஹனம் நடைபெற்றது. மேலும், மஹாசண்டி ஹோமம், சுமங்கலி பூஜை, வடுக பூஜை, கன்னியா பூஜை, வஸ்த்ராஹூதி, பூர்ணாஹூதியும், கடங்கள் புறப்பாடும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தங்ககவசம் அணிந்த உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story