ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 11 Feb 2022 1:56 AM IST (Updated: 11 Feb 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

இனாம்குளத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 27). இவர் பொன்மலை ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (26). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த இந்திராணி இனாம்குளத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

Next Story