வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
குன்னம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ெலப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த பேரூராட்சியில் 10 ஆயிரத்து 435 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 5 ஆயிரத்து 100 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 334 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளராக ஒருவரும் உள்ளனர். இவர்கள் தேர்தலில் வாக்களிக்க ெலப்பைக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 வாக்குச்சாவடி மையங்களும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வாக்குச்சாவடி மையங்களும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 5 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வாக்குச்சாவடிகளுக்கு 17 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெரம்பலூரில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை கொண்டு வரப்பட்டது. அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ெலப்பைக்குடிகாடு தேர்தல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ெலப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அதில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறையை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த அறை முன்பு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story