புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெரு-மீனாட்சிபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையின் நடுவே அமைந்து உள்ள பொதுகழிவுநீர் தொட்டி உடைந்து கழிவுநீர் இந்த சாலைகளில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தொட்டியை சீரமைத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
உடைந்த கழிவுநீர் குழாய்
மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஏ பிளாக்கில் உள்ள கழிவுநீர் குழாய்கள் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடுடன் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த கழிவுநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
யோகநாதன், எல்லீஸ் நகர்.
மாடுகள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் மாடுகள் அதிகஅளவில் நடமாடுகிறது. இதனால் தினமும் சிறு, சிறு விபத்துகள் இப்பகுதியில் ஏற்படுகிறது. மாடுகள் சாலையில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பொதுமக்கள், காட்டுப்பள்ளி.
தூர்வாரப்படாத கண்மாய்
மதுரை மாவட்டம் 11-வது வார்டு பரசுராம்பட்டி, சர்வேயர் காலனியில் உள்ள காண்மாயில் ஆகாயதாமரைகள் படர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே காண்மாயை சூழ்ந்துள்ள ஆகாயதாமரைகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய் கணேஷ், சர்வேயர் காலனி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சி 2-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மதுரை.
வேகத்தடையை சீரமைப்பார்களா?
மதுரை மாவட்டம் தெற்கு வெளிவீதியில் உள்ள ஈ.வே.ரா.மகளிர் உயர்நிலைப்பள்ளி சாலையில் இருந்த வேகத்தடை சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்கிறது. வேகத்தடை இல்லாத காரணத்தால் மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளி சாலையில் சேதமடைந்துள்ள வேகத்தடையை சீரமைக்க வேண்டும்.
சாகுல் ஹமீது, காஜியார் தோப்பு.
தார்ச்சாலை வசதி
மதுரை கோ.புதூர் அருகேயுள்ள கற்பகநகரில் மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் சாலை வசதி இல்லை. இங்கிருந்து மாட்டுத்தாவணி செல்லும் மண்ரோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் சிறு, சிறு விபத்துகளை தினமும் சந்திக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கே தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரசேகரன், மதுரை.
Related Tags :
Next Story