‘ஹிஜாப்’ அணியும் விவகாரம்: அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து கூற கூடாது - பசவராஜ் பொம்மை வேண்டுகோள்


‘ஹிஜாப்’ அணியும் விவகாரம்: அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து கூற கூடாது - பசவராஜ் பொம்மை வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Feb 2022 2:35 AM IST (Updated: 11 Feb 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

‘ஹிஜாப்’ அணியும் விவகாரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து கூற கூடாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

‘ஹிஜாப்’ அணியும் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்தின்போது நடந்த வன்முறை குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு

  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஹிஜாப் அணியும் விவகாரம் குறித்து இன்று (அதாவது நேற்று) விசாரணை நடத்துகிறது. அதனால் பொதுமக்களோ அல்லது அரசியல் தலைவர்களோ மக்களை தூண்டிவிடும் வகையிலான கருத்துகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் அமைதி காக்க வேண்டும். மாணவர்களிடையே மோதல்களை தவிர்ப்பதற்காக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  மக்களை தூண்டிவிடும் வகையில் வெளியில் இருந்து யாரும் செயல்படாத வண்ணம் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும். கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவரும் கோா்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் கூற வேண்டிய கருத்துகளை ஏற்கனவே கூறிவிட்டன. ஐகோர்ட்டு தீர்ப்பு வரும் அனைவரும் அதுபற்றி கருத்துகளை கூறாமல் இருக்க வேண்டும்.

அமைதியான சூழல்

  அமைதியை சீர்குலைக்கும் வகையில் யாரும் கருத்துகளை கூறக்கூடாது. கல்வித்துறை மற்றும் போலீஸ் துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று (அதாவது நேற்று) ஆலோசனை நடத்த உள்ளேன். இதுவரை நடந்த விஷயங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க இருக்கிறேன். பள்ளி-கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 3 நாட்கள் விடுமுறையை நீட்டிப்பது குறித்து அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

  மந்திரியின் மகன் காவி துண்டு கொடுத்ததாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. இதுபோன்ற கருத்துகளை கூற வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாணவர்களின் இந்த மோதல் விஷயத்தில் பொறுப்பான பதவியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து கூறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story