மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 4:18 AM IST (Updated: 11 Feb 2022 4:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி வீதம் கடந்த 1-ந்் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது குடிநீருக்கான தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று மாலை 6 மணி முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கன அடியில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 741 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story