1,071 மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கிய பெண் கைது
1,071 மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்:
சேலம் அருகே சோளம்பள்ளம், புதுரோடு, ஜாகீர் அம்மாபாளையம், ஜாகீர் ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஜாகீர் ரெட்டிபட்டியில் அம்சாவின் (வயது 48) வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,071 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story