ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு:சேலம் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு கொடுத்த சேலம் மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மண்டபத்தின் அருகே ஒரு தனியார் பள்ளிக்கூடம் இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்க வில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி செல்வகுமார் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் கொண்டலாம்பட்டி பகுதி செயலாளரும், சேலம் மாநகராட்சி 58-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளருமான கே.பி.பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மேலும் சில அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story