தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து செல்போன், மோட்டார் சைக்கிளை நூதனமுறையில் திருடிய மர்ம நபர்-போலீசார் விசாரணை

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து செல்போன், மோட்டார் சைக்கிளை நூதனமுறையில் திருடிய மர்ம நபர்-போலீசார் விசாரணை
x

சேலத்தில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை செல்போன் கடை ஊழியரிடம் இருந்து நூதனமுறையில் ஏமாற்றி திருடிச்சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்:

செல்போன் ஆர்டர்
சேலம் அழகாபுரத்தில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், தான் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் செல்போன் விைலக்கு வேண்டும் என்று கூறியுள்ளார். 
இதையடுத்து அந்த செல்போன் நிறுவன விற்பனை பிரதிநிதி கண்ணன்(வயது 30) ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனுடன் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் நான் தான் செல்போன் ஆர்டர் செய்தது என்று கூறி கண்ணனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தார். 
மேலும் அடுத்த தெருவில் தனது அண்ணன் வசிப்பதாக கூறிய அந்த வாலிபர், உங்கள் மோட்டார் சைக்கிளை கொடுத்தால் அவரிடம் செல்போனை காண்பித்து விட்டு வந்து விடுவேன் என்று கூறினார். இதை நம்பி அந்த விற்பனை பிரதிநிதியும், செல்போன் மற்றும் தனது மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்து விட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பு முன்பு காத்து நின்றார்.
போலீசார் விசாரணை
வெகுநேரமாகியும் அவர் திரும்பவராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் சம்பவம் தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில்  புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மாயமான வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story