பெரியகுளத்தில் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
பெரியகுளத்தில் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
பெரியகுளம்:
பெரியகுளம் வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மூத்த வக்கீல் ஞானகுருசாமி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் மருதை, தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவசுப்ரமணியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பெரியகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குடும்பநல வழக்குகளை தேனி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும், பெரியகுளம் நீதிமன்றத்திலேயே வழக்குகளை தொடர்ந்து நடத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் வக்கீல்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரியகுளம் கோர்ட்டு முன்பு நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வகையில் கோர்ட்டுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர். முடிவில் சங்க தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story