வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் செந்தில் ராஜ் ஆய்வு


வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் செந்தில் ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2022 7:14 PM IST (Updated: 11 Feb 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியன்பட்டினம், நாசரேத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்

திருச்செந்தூர்:
வீரபாண்டியன்பட்டினம், நாசரேத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
வாக்கு எண்ணும் மையம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதேபோல் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான அடிப்படை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் நகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து, ஆத்தூர் நகர பஞ்சாயத்து, கானம் நகர பஞ்சாயத்து ஆகிய 5 பகுதியில் பதிவாகும் வாக்குகள் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப் பள்ளியில் வைத்து எண்ணப்பட உள்ளன. 
கலெக்டர் ஆய்வு
இந்த பள்ளியில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலையில் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலந்து கொண்டவர்கள்
அவருடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி ஆணையர்கள் வேலவன் (திருச்செந்தூர்), சுகந்தி (காயல்பட்டினம்), திருச்செந்தூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், காயல்பட்டினம் நகராட்சி உதவி செயற்பொறியாளர் சுதாகர், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் கணேசன் (ஆறுமுகநேரி), முருகன் (ஆத்தூர்), வேலுச்சாமி (கானம்), திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்வேல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாசரேத் பிரசாகசபுரம்
நாசரேத் பிரகாசபுரம் தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 3 நகர பஞ்சாயத்துக்களுக்கும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்த வாக்குகள் எண்ணும் மையத்தை நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருச்செந்தூர் உதவி கலெக்டர்,  சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, நாசரேத் இன்ஸ்பெக்டர் பட்டாணி, மண்டல தேர்தல் பார்வையாளர் சுரேஷ், நாசரேத் நகர பஞ்சாயத்து தேர்தல் அலுவலர் பால்ராஜ், சாத்தான்குளம் நகர பஞ்சாயத்து தேர்தல் அலுவலர் உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story