தேனி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் மனு


தேனி கலெக்டர் அலுவலகத்தில்  பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் மனு
x
தினத்தந்தி 11 Feb 2022 7:16 PM IST (Updated: 11 Feb 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் மனு கொடுத்தார்.

உப்புக்கோட்டை:
தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி நேருஜி ரோடு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தமிழரசி பெண்கள் விடுதலைக்கழகம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இவர் தேனி நகராட்சி 33-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் நேற்று அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜாவிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் மனுவை வாபஸ் பெறும்படி மிரட்டல் வந்தது. இதையும் மீறி நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். தற்போது என்னை வார்டு பகுதியில் பிரசாரம் செய்யவிடாமல் சிலர் தடுக்கிறார்கள். தொடர்ந்து மிரட்டல் வருகிறது. எனவே நான் 33-வது வார்டில் பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டு தேர்தல் பிரசாரம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story